Tamil Reader

திருச்சி விமான நிலையத்தில் ரேபிட் PCR டெஸ்ட் வசதி துவக்கம் – கட்டணம் எவ்வளவு?

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரேபிட் PCR பரிசோதனை எடுக்கும் வசதி துவங்கப்பட்டுள்ளது. இந்த சேவை நேற்று (8/12/2021) முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக திருச்சி விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு கட்டணமாக 1370 ரூபாய் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளிவந்துள்ள அறிவிப்பில்,” திருச்சிக்குப் பயணிக்கும் அனைத்து சர்வதேச பயணிகளின் நலனைக் கருத்தில்கொண்டு விமான நிலையத்திலேயே ரேபிட் PCR பரிசோதனை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் மாதிரி சேகரிப்பிற்குப் பிறகு காத்திருக்கும் நேரம் இதனால் குறையும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!