Tamil Reader

துபாயில் இருந்து திருநெல்வேலி வந்த நபர் உட்பட தமிழகத்தில் 9 பேருக்கு COVID-19 தொற்று..!

COVID 19

தமிழகத்தில் கடந்த 4 ம் தேதி, முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று (மார்ச் 22) மட்டும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

துபாயில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த 43 வயதான நபர் மற்றும் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த நபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட இருவரும் சீராக உள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!