Tamil Reader

டாப் டக்கர் அறிவிப்பு – தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட டிஜிட்டல் பட்ஜெட்டில் எழை எளிய மக்களின் நலன் கருதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இது குறித்து அவர் பேசியதாவது..

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 2 கோடியே 63 லட்சம் இருசக்கர வாகனங்கள் புழக்கத்தில் உள்ளன. அனைவரும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஏழை-எளிய மக்கள். இத்தகைய ஏழை, எளிய மக்கள் பெட்ரோல் விலை உயர்வால் அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். எளியோரின் வலியை உணர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெட்ரோலுக்கு விதிக்கப்படும் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்க ஆணையிட்டுள்ளார்.

TN Budget 2021-22 Highlights, PTR Palanivel Thiagarajan, M K Stalin, DMK,  Agriculture budget, e budget latest news - Financial News

3 ரூபாய் குறைப்பால் ஆண்டுக்கு ஆயிரத்து 160 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படும். வரிக்குறைப்பால் நாட்டிலேயே லிட்டர் 100 ரூபாய்க்கு குறைவாக பெட்ரோல் விற்கும் மாநிலமாக தமிழ்நாடு உருவெடுக்கும். ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான வரியை அதிகரித்து, அதனை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும்.

Election Commission Orders To Remove Hoardings With PM Modi's Image At  Petrol Pumps In Poll-Bound States | HW English

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் 2014ஆம் ஆண்டு மே மாதத்தில் பெட்ரோல் மீதான ஒன்றிய வரி 10 ரூபாய் 39 காசுகளாக இருந்தது, தற்போது 32 ரூபாய் 90 காசுகளாக அதிகரித்திருக்கிறது. இதே காலகட்டத்தில் டீசல் மீதான ஒன்றிய வரி, 3 ரூபாய் 57 காசுகளில் இருந்து 31 ரூபாய் 80 காசுகளாக பாஜக அரசு உயர்த்தியுள்ளது. ஒன்றிய அரசு தொடர்ந்து வரியை உயர்த்திவரும் பட்சத்திலும் ஏழை, எளிய மக்களின் நலன்கருதியும், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படியும், திமுக அரசு வரிக்குறைப்பை மேற்கொண்டுள்ளது

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பின்பேரில் பெட்ரோல் விலை குறைப்பு தமிழ்நாட்டில் நள்ளிரவு முதலே அமலுக்கு வந்தது. இதனால் சாமானியர்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

இதையும் படிங்க.!