Tamil Reader

வெளிநாடுகளில் இருந்து சென்னை வருவோர் 2 நாள் மட்டும் கட்டண குவாரண்டைன் இருந்தால் போதும் – சென்னை விமான நிலையம் அறிவிப்பு..!

chennai-AIRPORT

வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையம் வருவோர் 8 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள் என சமீபத்தில் சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில், இனி வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையம் திரும்புவோர், கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கையில் வைத்திருக்கும்பட்சத்தில் அவர்கள்  2 நாட்கள் மட்டுமே கட்டண தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகளுடனான மாநில அரசு அதிகாரிகளின் உயர்மட்ட கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்காதவர்கள், வழக்கமான 7 நாள் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என சென்னை விமான நிலையம் தெரிவித்திருக்கிறது.

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தாலும், மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், மாநில சுகாதார அதிகாரிகளால் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு, அதில் நெகட்டிவ் என வருபவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் சுவிதா

ஆகஸ்டு 8 ஆம் தேதிமுதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்புவோர் ஏர் சுவிதா (Air Suvidha) என்ற ஆன்லைன் போர்டலில் தங்களது பயண விபரங்களைக் கட்டாயம் அளிக்கவேண்டும் என இந்திய அரசு தெரிவித்திருந்தது. அதேபோல, கட்டண தனிமைப்படுத்தலில் இருந்து விலக்குப் பெற இதே போர்டலில், தங்களது பயண நேரத்திற்கு முன்னதான 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பதிவேற்றம் செய்யவேண்டும். இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!