Tamil Reader

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை மறைவு..!

seeman-tamil

தமிழ் திரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் அவர்களின் தந்தை செந்தமிழன் இன்று வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரைப்பட துறையினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகேயுள்ள அரணையூர் கிராமத்தில் சீமானின் பெற்றோரான செந்தமிழன் – அன்னம்மாள் தம்பதி வசித்துவந்தனர். இந்நிலையில் அவரது சொந்த ஊரிலேயே செந்தமிழன் அவர்களின் இறுதிச்சடங்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “சீமான் அவர்களின் தந்தையார் செந்தமிழன் அவர்களின் மறைவுச் செய்தி வேதனை தருகிறது. அவரை இழந்து துயரத்தில் இருக்கும் சீமானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், சீமான் அவர்களின் திரையுலகப் பயணத்திற்கும் பின்னர் அரசியல் செயல்பாடுகளுக்கும் பக்கபலமாக இருந்த பெரியவர் செந்தமிழன். அவரது மறைவால் வாடும் திரு.சீமான் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவரது இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க.!