Tamil Reader

கொரோனா வைரஸிற்கு தடுப்பூசி.. முழு ஆய்வில் தமிழர்..

Dr Stalin Raj

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸால் தற்போது வரை 3,831 இறந்துள்ளதாகவும், 110,092 பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த கொடிய வைரஸிற்கு தடுப்பு மறந்து தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், தடுப்பு மறந்து கண்டுபிடிப்பதற்காக பல்வேறு நாடுகளில் பல ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து முழுவீச்சுடன் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனோ அச்சுறுத்தலை முறியடிக்க வேண்டும் என்ற சபதத்தோடு தடுப்பூசியை ஆய்வு செய்து வருகிறார் ஸ்டாலின் ராஜ்.

யார் இந்த ஸ்டாலின் ராஜ்:

Dr Stalin Raj

ஸ்டாலின் ராஜ் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை பூர்வீகமாக கொண்டவர். பயோ டெக்னாலஜி துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள ஸ்டாலின் ராஜ் பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி இருக்கிறார். மேலும் குறிப்பாக நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் உள்ள எராஸ்மஸ் என்ற அதிநவீன ஆராய்ச்சி நிலையத்தில் வைரஸ் தொடர்பாக பல ஆய்வுகளை நடத்தி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், தற்போது இவர் மேற்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டறியும் ஆய்வில் ஸ்டாலின் ராஜுடன் 5-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Dr Stalin Raj Team

எங்கள் ஆய்வு விரைவில் வெற்றியடையும்:

இந்தியாவின் செய்தி இணையதளமான One India நிறுவனம் ஸ்டாலின் ராஜை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது ”கொரோனோ தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன், அதாவது கொரோனோ வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கையாக போட வேண்டிய தடுப்பூசியை எங்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. அந்த ஆய்வு முடிவடைய குறிப்பிட்ட நேரம், காலம் எல்லாம் சொல்ல முடியாது. ஆனால் விரைவில் ஆய்வு வெற்றி பெற்று தடுப்பூசியை வெளிக்கொண்டு வர தீவிரமாக உழைத்து வருகிறோம். மேற்கொண்டு எந்த மாதிரியான சோதனைகள், ஆய்வுகள் என்பது பற்றியெல்லாம் கூறுவது ஏற்புடையதாக இருக்காது”.

மேலும் “கொரோனா தடுப்பு மருந்தை நான் மட்டும் கண்டறிய முயற்சி செய்யவில்லை. என்னை போல் பல ஆராய்ச்சியாளர்கள் பல நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நான் மட்டுமே இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னை போல் பல ஆராய்சியாளர்கள் சர்வதேச அளவில் இந்த கொரோனா தாக்குதலில் இருந்து மனிதர்களை காப்பாற்ற உழைத்து வருகின்றனர். அதனால் முதலில் யாருடைய சோதனை வெற்றிபெற்று தடுப்பு மருந்து வெளிவந்தாலும் மகிழ்ச்சியே” என்றும் தெரிவித்தார்.

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!