Tamil Reader

துபாயில் இருந்து திருச்சி வந்த பயணிகளிடம் சோதனை; பசை வடிவில் மறைத்து கொண்டுவந்த தங்கம் பறிமுதல்..!

Trichy International Airport

துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்த பயணியிடம் பசை வடிவில் உடலில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஏர் இந்தியா விமானம் திருச்சி வந்தடைந்தது. பின்னர் அந்த விமானத்தில் பயணம் செய்து வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அந்த சோதனையின் போது, திருச்சியை சேர்ந்த சங்கர் (வயது 34) என்பவர் தங்கத்தை பசை வடிவில் தனது உடலில் மறைத்து கடத்தி வந்தது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் இருந்து 376 கிராம் தங்கம் பறிமுதல் செய்தனர், அதன் இந்திய மதிப்பு ரூ.16 லட்சத்து 57 ஆயிரம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மற்ற சில பதிவுகள்