துபாயில் இருந்து பார்சலில் கடத்திவரப்பட்ட தங்க பருப்புகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயில் இருந்து சென்னைக்கு கொரியா் பாா்சலில் கடத்தி வந்த, இந்திய மதிப்பில் சுமார் 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரை கிலோ தங்க பருப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, விமான நிலைய சரக்கப்பிரிவில் சுங்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பருப்பு வடிவில் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இதை அடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, தானேவை சேர்ந்த ஒருவரை கைது செய்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Source : ThanthiTV