Tamil Reader

அப்துல் கலாமின் மூத்த சகோதரர் காலமானார் – இன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது..!

kalam brother

இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் திரு.முகமது முத்து மீரான் மரைக்காயர் வயது மூப்பின் காரணமாக நேற்று மாலை அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் காலமானார். அவருக்கு வயது 104 ஆகும். இதனையடுத்து அவருடைய இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என அவரது குடும்பத்தார் தெரிவித்திருக்கின்றனர்.

தலைவர்கள் இரங்கல்

முகமது முத்து மீரான் மரைக்காயரின் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வெளியிட்ட அஞ்சலிக் குறிப்பில்,”இந்திய மக்களின் மனங்களில் வாழும் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் சகோதரர், பெரியவர் திரு.முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருந்தமடைந்தேன். கலாம் அவர்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய அன்னாரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க.!