Tamil Reader

துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த 5 பேர் சிவகங்கை மருத்துவமனையில் அனுமதி – ஒமிக்ரான் பாதிப்பா?

chennai-AIRPORT

துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த 6 பேருக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதா? என்ற சந்தேகத்தின் காரணமாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதாவது துபாயில் இருந்து வந்த 4 பேர், சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவர் மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து வந்த ஒருவர், ஆகியோருக்கு சென்னை விமான நிலையத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கூடுதலாக இவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டதால் ஒமிக்ரான் பாதிப்பாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்த 6 பேருக்கும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவர்களின் ரத்த மாதிரிகள் சென்னை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சோதனை முடிவுகளுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் இதுவரை தொற்று காரணமாக 20 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க.!