Tamil Reader

தமிழக தேர்தல்: திமுக அபார வெற்றி – முதலமைச்சர் ஆகிறார் முக ஸ்டாலின்..!

DMK STALIN

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே சுற்றாக நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று தமிழகம் முழுவதும் 75 மையங்களில் எண்ணப்பட்டு வெளியிடப்பட்டன. இதில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. திமுக கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி சட்ட மன்றத்தில் வலுவான ஆளுங்கட்சியாக அமர்கிறது.

அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசனிடம் வெற்றியைப் பறிகொடுத்தார். அதேபோல, அதிமுகவின் அமைச்சர்களான ஜெயக்குமார், சிவி.சண்முகம், ராஜேந்திர பாலாஜி போன்றோர்களும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியில் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். அதேபோல, அக்கட்சியும் தமிழகத்தின் மூன்றாவது பெரிய வாக்குவங்கியை வைத்திருக்கும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

எளிமையான முறையில் பதிவியேற்பு

கொரோனா சூழல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பதிவியேற்பு விழா நடைபெறும் எனவும் அதற்கு முன்னர் எம்எல்ஏ கூட்டத்தை நடத்த இருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க.!