Tamil Reader

ஷார்ஜாவில் இருந்து தமிழகம் திரும்பிய பயணி உட்பட 6 பேர் கோவை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதி..!

COVID 19 Kovai Hospital

கோயம்புத்தூர் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை வார்டில் 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஷார்ஜா, சிங்கப்பூர், இத்தாலி, பிரான்ஸ், ஆகிய பகுதிகளில் இருந்தும், மேலும் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்தும் வந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என பரிசோதனை நடத்தப்படுகிறது.

ஷார்ஜாவிலிருந்து திரும்பிய (மார்ச் 5) மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் இதில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன் உடுமலையை சோ்ந்த 35 வயது இளைஞா் ஒருவர், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸை சேர்ந்த இருவர் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

மேலும், 4 பேரின் ரத்த மாதிரிகள் சென்னை அனுப்பப்பட்ட நிலையில் மேலும் 2 பேரின் ரத்த மாதிரிகள் அனுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!