Tamil Reader

துபாயில் இருந்து தமிழகம் வந்த பயணிகளுக்கு கொரோனா சோதனை; கையில் தனிமைப்படுத்தல் முத்திரை..!

202003220114085627_Coronation-test-for-travelers-from-Singapore-to-Madurai-166_SECVPF

துபாயில் இருந்து நேற்று முன்தினம், 6 குழந்தைகள் உள்பட 155 பயணிகளுடன் விமானம் மதுரைக்கு வந்தது.

அதை தொடர்ந்து, சுகாதார நடவடிக்கையாக, விமான நிலையத்தில் வந்த அனைவருக்கும் 40-க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்தனர்.

அந்த மருத்துவ சோதனையில் பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர்களது கையில் ஏப்ரல் 17-ந் தேதி வரை வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளேன் என்ற வாசகம் அடங்கிய முத்திரை சீல் குத்தப்பட்டது. அதுபோல், பயணிகள் அனைவரிடமிருந்தும் உறுதி மொழி கடிதத்தில் கையெழுத்து பெறப்பட்டது.

அந்த உறுதிமொழி கடிதத்தில், “கொரோனா அறிகுறிகள் இல்லாத போதும் என்னை நான் வீட்டில் 28 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்வேன். தன் சுத்தத்தை பேணி காப்பேன் என்றும், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள மருத்துவரை அணுகுவேன், சமுதாய நலன் கருதி இதை நான் கண்டிப்பாக கடைபிடிப்பேன்” என எழுதப்பட்டிருந்தது.

அதே நேரத்தில், அந்த விமானத்தில் வந்த 5 பேர் தவிர மற்ற அனைவரும் முத்திரை குத்தப்பட்டு தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில், 50 வயதுக்கு மேற்பட்ட 5 பேரை மட்டும் முகாம்களில் தங்க வைக்க பரிந்துரை செய்யப்பட்டது. வயது முதிர்வின் காரணமாகவும், சர்க்கரைநோய், ரத்த அழுத்த நோய் போன்றவை கேட்டறிந்து அதன்படி அவர்களை கண்காணிக்க வேண்டிய அவசியம் இருப்பதால் முகாமில் தங்க வைத்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு சில தினங்களில், அதாவது உடல் ஆரோக்கியத்தை பொறுத்து, அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!