கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், COVID-19 சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர், அழகான பெண் குழந்தை பெற்றெடுத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான கர்பிணி பெண், கடந்த மார்ச் 20ஆம் தேதி துபாயில் இருந்து ஊர் திரும்பினார்.
அதை தொடர்ந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக தனிமைபடுத்தி அவரை வைத்து வந்தனா்.
இந்நிலையில், அந்த பெண்மணிக்கு இன்று (மார்ச் 29) அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா சிறப்பு வார்டில் பிறந்த முதல் குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இருவரது சளி மற்றும் ரத்த மாதிரிகள், COVID-19 பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.