Tamil Reader

“கொரோனாவாக இருக்குமோ என்ற அச்சம்” : தாய், தந்தை, மகள் தூக்கிட்டுத் தற்கொலை..!

Three-members-of-the-same-family-commit-suicide-by-hanging_SECVPF

சென்னை திருமுல்லைவாயில் சோழம்பேடு சாலை பகுதியை சேர்ந்தவர் டில்லி (74), அவரது மனைவி மல்லிகேஸ்வரி (64) மற்றும் மகள் நாகேஸ்வரி (34). விவசாயியான டில்லி கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்திருக்கிறது. அருகில் உள்ள மெடிக்கலில் மருந்து மாத்திரைகளை தாமே வாங்கி உண்டு வந்திருக்கிறார். இந்நிலையில் அவரது மனைவி மற்றும் மகளுக்கும் காய்ச்சல் வரவே கொரோனாவாக இருக்குமோ என்ற அச்சத்தில் மூவரும் நேற்று இரவு 3 மணிக்கு தனித்தனியாக சேலையில் தூக்கிட்டுக்கொண்டனர்.

இவர்களது மகள் நாகேஸ்வரி சில வருடங்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்றவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மல்லிகேஸ்வரியின் அண்ணன் வெங்கட்ராமன் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயல் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கே.எம்.சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க.!