Tamil Reader

கோவை: ஆடி காரில் சென்று ஆட்டைத் திருடிய இளைஞர்கள் – விரட்டிப் பிடித்து வெளுத்த மக்கள்..!

-arrested-man-handcuffed-hands

கோவை மாவட்டத்தில் சுந்தராபுரம் பகுதியை அடுத்துள்ளது மச்சம்பாளையம். இங்கு வசித்துவரும் அமிர்தம் (50) என்பவர் வழக்கம்போல தனது தோட்டத்தில் கட்டியிருக்கும் ஆடுகளைக் காண சென்றிருக்கிறார். அப்போது ஆடி காரில் வந்த இரண்டு இளைஞர்கள் ஆடுகளை திருட முயற்சித்திருக்கிறார்கள்.

உடனேயே அக்கம்பக்கம் இருப்பவர்களை உதவிக்கு அழைத்திருக்கிறார் அமிர்தம். குரல் கேட்டு ஓடிவந்த மக்கள் காரில் இருந்த இளைஞரை மடக்கிப் பிடித்து வெளுத்திருக்கிறார்கள். பின்னர் இளைஞரை காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கின்றனர். திருட்டில் ஈடுபட்ட மற்றொருவர் அங்கிருந்து சிட்டாய்ப் பறந்துவிட்டார்.

ஆடும் கையுமாக கைதுசெய்யப்பட்ட 24 வயதான தீபக், தடாகம் சாலையில் அமைந்துள்ள TVS நகரைச் சேர்ந்தவர் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மாட்டிக்கொண்ட நேரத்தில் லாவகமாக தப்பித்துச் சென்ற தனது நண்பன் ஈஸ்வரன் குறித்து முழு விலாசத்தையும் தீபக் கூறியிருக்கிறார்.

விரைவில் ஈஸ்வரனும் காவல்துறையிடம் பிடிபடுவார் என காவல்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க.!