Tamil Reader

சான்சே இல்ல..சென்னை போல ஒரு ஊரே இல்ல..HBD Chennai!

வந்தாரை வாழ வைக்கும் ஊர் என்றால் சட்டென நினைவுக்கு வருவது சென்னை மட்டுமே. மெட்ராஸ் என அழைக்கப்பட்ட பெருநகரத்தை சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டவர்கள் ஏராளம். மஞ்சைப் பையுடன் பிழைக்க வந்து இன்று கோடீஸ்வரனாக பலரை உயர்த்தி அழகு பார்த்த மண் சென்னை. தமிழகத்தின் தலைநகரம், இந்தியாவின் நான்காவது பெரிய நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களில் ஒன்று என பல பெருமைகளைக் கொண்டது ஊர். பலமொழிகளைப் பேசும் மக்கள் வாழ்வதால், பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாகவே இன்று வரை ஜொலிக்கும் சென்னை மாநகரம் இன்று தனது 382வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.

சுனாமி, புயல் வெள்ளம், கொரோனா என எத்தனை இடர்பாடுகளை சந்தித்தாலும் ஃபீனிக்ஸ் பறவையை போல கம்பீரமாக மீண்டும் வரும் சென்னைக்கு அதில் வாழும் மக்கள்தான் ஸ்பெசல்!

மெட்ராஸ் தோன்றிய கதை

1639ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா உதவியுடன் இன்று தலைமை செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்திருக்கும் இடத்தை விலைக்கு வாங்கினர். ஓராண்டில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை எழுந்து நின்றது. அந்த இடத்தை விற்ற ஐய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே அமைந்த ஊர் சென்னப்பட்டினம் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்படத் தொடங்கியது.

A Brief History of Fort St. George in Chennai, India
Fort St. George

ஆங்கிலேயர்கள் லிட்டில் மவுண்டில் தங்கள் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு வேலைக்கு மட்டும் செயிண்ட் ஜார்ஜ் வந்து சென்றனர். இதற்காக அன்று அமைக்கப்பட்டதே மவுண்ட் ரோட் எனப்படும் இன்றைய அண்ணா சாலை.

The Madras Day – Aug'22 | Madras city, Rare pictures, Chennai

மெட்ராஸ் சென்னையானது எப்படி?

இன்றைய கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளாவின் ஒரு பகுதி என அனைத்தும் உள்ளடக்கிய நிலப்பரப்பு சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டு தமிழர்கள் வசிக்கும் பகுதி தமிழ்நாடு என அழைக்கப்படத் தொடங்கியது. தலைநகரின் பெயர் மெட்ராஸ் என்றானது. பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 1996ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட மெட்ராஸ் என்ற பெயர் நீக்கப்பட்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் சென்னை என்றே அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் மெட்ராஸ் எனும் சொல் மெல்ல மறைந்து சென்னை பரவலாக பேசு பொருளாக மாறியது.

Things To Do In Chennai - Outlook Traveller
Chennai Central
சென்னையின் அடையாளங்கள்

புனித ஜார்ஜ் கோட்டை, மெட்ராஸ் உயர்நீதிமன்றம், மெட்ராஸ் வங்கி, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, கிண்டி பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை வானிலை ஆய்வு மையம், மெரீனா கடற்கரை, ஹிக்கின்பாதம்ஸ், ஸ்பென்சர் பிளாசா, கிண்டி தேசிய பூங்கா, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம், பிர்லா கோளரங்கம், செயின்ட் ஜார்ஜ் பள்ளி, சென்னை கிறித்தவக் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னிமாரா நூலகம், மெட்ராஸ் கால்நடைக் கல்லூரி, BMW கார் உற்பத்தி தொழிற்சாலை, மெட்ராஸ் பிரசிடன்சி ரேடியோ க்ளப், ரிப்பன் மாளிகை என சென்னையின் பெருமையை பேச பல இடங்கள் இருக்கின்றன.

நவீன சென்னையின் இன்றைய முகம்

பல வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை கண்டிருக்கிறது சென்னை. தமிழ்நாட்டின் இதயமாக துடிக்கும் இந்த சென்னை மாநகரம் அன்றாடம் பொலிவுப் பெற்றுக்கொண்டே இருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தால் உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்த பெருமையும் சென்னையையே சாரும். புகழ்பெற்ற கோவில்கள், நட்சத்திர ஹோட்டல்கள், வானுயர கட்டிடங்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், பொழுதுபோக்கு தியேட்டர்களுடன் கூடிய ஷாப்பிங் மால்கள், பரபரப்பான சாலைகள், கூட்டம் அள்ளும் கடைவீதிகள், சிற்றுண்டி உணவகக் கடைகள் என திரும்பும் திசையெல்லாம் மக்கள் தலைகள் நிரம்பி வழியும் சென்னை எப்போதுமே தன்னை நம்பி வந்தோரை வாழ வைக்கும் செழிப்பான பூமிதான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. பிறந்தநாள் வாழ்த்துகள் சென்னை..

இதையும் படிங்க.!