Tamil Reader

இந்தியா..? உங்களுக்குத் தமிழ் தெரியாதா? – மேடையைவிட்டு இறங்கிய AR.ரஹ்மான்..!

-ar-rahman-gang

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 99 சாங்ஸ் என்னும் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தை விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்க, இஹான் பட், எடில்சி வர்கீஸ், மனிஷா கொய்லாரா போன்றோர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தயாரித்து இருக்கிறார். ஒரு கலைஞன் சந்திக்கும் வாழ்வியல் போராட்டம் தான் கதை என்கிறார் இசைப்புயல்.

இந்நிலையில் சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் ஷங்கர், கவுதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஜே.சூர்யா, விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், ஜிவி பிரகாஷ் எனப் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அப்போது ஏஆர்.ரஹ்மானிடம் தொகுப்பாளர் இந்தியில் கேள்வி கேட்க, “ஹிந்தி..முன்னாடியே கேட்டேன் உங்களுக்குத் தமிழ் தெரியுமானு” எனக் கூறியபடி மேடையிலிருந்து கீழே இறங்கினார். தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க.!