Tamil Reader

துபாய் வழியாக சென்னை வந்த 14 பேருக்கு COVID-19 அறிகுறி – கண்காணிப்பு தீவிரம்..!

Covid screening

துபாய் வழியாக இன்று சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் 14 பேருக்கு COVID-19 அறிகுறி உள்ளதாக கூறப்படுகிறது.

அதில் 5 பெண்கள், 9 ஆண்கள் அடங்குவர். அவர்களில் தமிழ்நாட்டை சோ்ந்தவா்கள் 9 பேர், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் 3 பேர் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேர்.

தமிழ்நாட்டை சோ்ந்த 9 பேரில், 7 போ் சென்னை மற்றும் புறநகா் பகுதிகளை சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள 14 பேரும், 30 – 40 வயதுக்குட்பட்டவா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவா்கள் டென்மார்க், ஸ்வீடன், பிரான்ஸ், இத்தாலி, ஜொ்மன், சுவிட்சா்லாந்து நாடுகளில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியவா்கள். தற்போது கொரோனா வைரஸ் பீதி காரணமாக சொந்த நாட்டிற்கு துபாய் வழியாக வந்துள்ளனா்.

அந்த 14 பேருக்கும் கொரோனா அறிகுறி இருந்ததால் பூந்தமல்லியில் உள்ள அரசு பொது சுகாதார நிறுவனத்தில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

இவர்கள் சுமார் 14 நாட்கள் முதல் 28 நாட்கள் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள் எனவும் மேலும் கூடுதலாக ஆட்கள் வந்தால் அவர்களையும் தங்க வைக்க இட வசதி உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Source : News7Tamil

மற்ற சில பதிவுகள்