Tamil Reader

ஆர்.சி.பி. கேப்டன்சியில் இருந்து விலகுகிறார் விராட் கோலி – ஈ சாலா கப்புக்கு வாய்ப்பே இல்லையா?

இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து உலகக்கோப்பைக்கு பின்னர் விலகுவதாக விராட் கோலி அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த ஷாக் தணிவதற்குள்ளாகவே மற்றொரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார் விராட் கோலி!

நடப்பு ஐபிஎல் தொடருக்குப் பிறகு அடுத்த ஆண்டு முதல் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஆர்.சி.பி. கேப்டன் விராட் கோலி கூறியதாவது..

ஆர்சிபி அணியின் கேப்டனாக இதுதான் எனது கடைசி சீசன். ஆனால் தொடர்ந்து ஆர்சிபி அணியில் ஒருவீரராக நான் எனது கடைசி ஐபிஎல் வரை விளையாடுவேன். அனைத்து ஆர்சிபி ரசிகர்களுக்கும், என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும் நன்றி. இதுதொடர்பாக அணி வீரர்களிடம் பேசியிருக்கிறேன், என்னுட பணிச்சுமை காரணமாக சமீபத்தில் டி20 கேப்டன் பதவியிலிருந்தும் விலகினேன்.

He's no machine': Virat Kohli's childhood coach defends RCB skipper's poor IPL 2020 start

இதுவும் என் மனதில் இருந்தது. என்னுடைய முன்னோக்கிய நகர்வுகள் தெளிவாக இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறேன். எனது முடிவையும் நிர்வாகத்திடம் தெளிவுபடுத்தி, ஆர்சிபி வீரராகத் தொடர்வேன் எனத் தெரிவித்துவிட்டேன். இது என் பயணத்தில் சிறிய நிறுத்தம்தான் முடிவு அல்ல, பயணம் தொடரும். இந்த வாய்ப்பை வழங்கியஆர்சிபி நிர்வாகம், பயிற்சியாளர்கள், ஊழியர்கள், வீரர்கள், ஆர்சிபி குடும்பம் அனைவருக்கும் நன்றி. இது எளிதான முடிவல்ல, ஆனால், நன்கு சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு, அணியின் நிர்வாகத்தின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leaving RCB captaincy could liberate Virat Kohli, see him scale untouched peaks | Sports News,The Indian Express

கடந்த 2008ம் ஆண்டு ஆர்சிபி அணியில் இடம் பெற்ற விராட் கோலி, 2013ம் ஆண்டில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆர்சிபி அணியில் ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாகச் செயல்பட்டு பல்வேறு தருணங்களில் அணியை மீட்டுள்ள கோலி, கேப்டனாக கடநத் 8 சீசன்களாக ஒருகோப்பையைக் கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க.!