Tamil Reader

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: பதக்க வேட்டையில் இந்தியா!

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியா நேற்று பதக்க வேட்டை நடத்தியது. இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் கிடைத்தன. ஈட்டி எறிதல் வீரர் சுமித் அண்டில் எஃப் 64 பிரிவில் தங்கம் வென்றார். தங்கம் வென்றதை விட, தனக்கு வழங்கப்பட்ட ஆறு வாய்ப்புகளில் மூன்று வாய்ப்புகளில் உலக சாதனை படைத்து தடகள உலகை வியப்பில் ஆழ்த்தினார்.

Tokyo Paralympics: India's Sumit Antil Wins Gold in Javelin Throw - Sentinelassam
சுமித் அண்டில்

அதிகபட்சமாக 68.55 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை வீசி புதிய உலக சாதனை படைத்துள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த 22 வயது சுமித் அண்டில், இளம் வயதில் ஒலிம்பிக்ஸில் மல்யுத்த பிரிவில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவோடு இருந்தார். ஒரு விபத்து அவரது வாழ்க்கையை மாற்றிவிட்டது. விபத்தில் இடது காலை இழந்தாலும், மனம் தளராது போராடி டோக்கேியா பாரா ஒலிம்பிக்ஸில் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் SH 1 பிரிவில், இந்தியாவின் அவனி லெகரா தங்கம் வென்றார். இறுதிப் போட்டியில் 249.6 புள்ளிகளைச் சேர்த்து முதலிடம் பிடித்தார். தன் 11 வயதில் அவனி விபத்தில் சிக்கியதில் இடுப்புக்கு கீழே உள்ள பகுதி செயலிழந்தது. இதனால் அவர் உட்கார்ந்து கொண்டே துப்பாக்கி சுடும் பிரிவில் பங்கேற்று சாதித்துள்ளார்.

Tokyo Paralympics: Avani Lekhara wins Gold Medal in women's 10m AR Standing SH1 Final
அவனி லெகரா

இரண்டு முறை பாரா ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா, இந்த முறை வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான F 46 பிரிவில் களமிறங்கிய தேவேந்திர ஜஜாரியா, 64. 35 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை வீசினார்.

Tokyo Paralympics: Devendra Jhajharia and Sundar Singh won silver and bronze medals in in F46 javelin throw
தேவேந்திர ஜஜாரியா

இதே பிரிவில் இந்தியாவின் சுந்தர் சிங் குர்ஜார் 64. 01 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

Para javelin thrower Sundar Singh Gurjar seeks Tokyo redemption after Rio heartbreak | Tokyo Paralympics News - Times of India
சுந்தர் சிங் குர்ஜார்

இது தவிர, ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியின் F 56 பிரிவில் யோகேஷ் கதுனியா, 44.38 மீட்டர் தூரத்துக்கு வட்டை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Yogesh Kathunia, who was harmed by a paralytic attack at the age of 8, now gave India a medal in Pardes
யோகேஷ் கதுனியா

மொத்தமாக டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியா இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் உள்பட ஏழு பதக்கங்கள் வென்று, பதக்கப் பட்டியலில் 26-வது இடத்தில் உள்ளது. வட்டு எறிதல் போட்டியின் எஃப் 52 பிரிவில் பங்கேற்பதற்கு தகுதிபெறவில்லை என வினோத்குமார் வென்ற வெண்கலப் பதக்கத்தை ஒலிம்பிக் கமிட்டி திருமப்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!