Tamil Reader

ஒரேநாளில் 3 பதக்கம் – மாஸ் காட்டிய இந்தியா!

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் 2.06 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்று அசத்தியுள்ளார். இதேபோல டேபிள் டென்னிஸ் கிளாஸ் 4 பிரிவில், தங்கப்பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் சீனாவின் ஜுவ் யிங்கை, இந்தியாவின் பவினா படேல் எதிர்கொண்டார். ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய சீன வீராங்கனை 3- 0 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார். இருப்பினும், தன் முதல் பாராலிம்பிக்ஸ் போட்டியிலேயே பவினா பதக்கம் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

India Schedule at Tokyo Paralympics, August 29, 2021: Event, Match Timings  and Live Streaming Details
Bavina

வெள்ளிப் பதக்கத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக பவினா படேல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். குஜராத்தைச் சேர்ந்த பவினா, 12 வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவர். இதுதவிர, வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத்குமார் 19.91 மீட்டர் தூரத்துக்கு வட்டு எறிந்து, வெண்கலப் பதக்கம் வென்றார். 41 வயதான இவர், F 52 பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்த பதக்கத்தை பெற்றுள்ளார். வெண்கலப் பதக்கம் வென்ற வினோத் குமார், முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஆவார். பணியின்போது பனிச்சரிவில் சிக்கி இவரது கால்கள் செயலிழந்தது. பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க.!