Tamil Reader

அடேங்கப்பா..வழியனுப்பு விழாவில் கண்ணீரை துடைக்க மெஸ்ஸி பயன்படுத்திய டிஸ்யு பேப்பர் 1 மில்லியன் டாலருக்கு ஏலம்!

அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரரான மெஸ்ஸி புகழ்பெற்ற கால்பந்து க்ளப்பான பார்சிலோனாவில் இருந்து அண்மையில் விலகினார். நிதி நெருக்கடி காரணமாக அணியில் இருந்து விலகிய மெஸ்ஸி தற்போது பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் அணிக்கு விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த நிலையில் பார்சிலோனா அணி சார்பில் நடைபெற்ற வழியனுப்பி விழாவில் உரையாற்றியபோது தான் கடந்து வந்த பாதை குறித்து பேசி நெகிழ்ச்சியில் மெஸ்ஸி கண்ணீர் வடித்தார். பின்னர் தனது மனைவி அளித்த டிஸ்யு பேப்பரை கொண்டு கண்ணீரை துடைத்தார்.

மெஸ்ஸி பயன்படுத்திய அந்த டிஸ்யு பேப்பர் தற்போது பேசு பொருளாகி மாறியுள்ளது. விழா மேடையில் மெஸ்ஸி விட்டுச் சென்ற டிஸ்யு பேப்பரை கைப்பற்றிய ஒருவர் அதனை 1 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்ய உள்ளதாக இணையதளம் வாயிலாக அறிவித்தார். மெஸ்ஸி பயன்படுத்திய அந்த டிஸ்யுவில் அவரது DNAவை கண்டறியலாம் என்றும் மெஸ்ஸியை போன்ற ஒரு ஜாம்பவானை க்ளோன் செய்யவும் முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை அந்த டிஸ்யுவை யாரேனும் வாங்கினார்களா என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை. இளம் வயதில் மெஸ்ஸியின் ஆட்டத்தை கண்டு வியந்த பார்சிலோனா செயலாளர் ஒரு டிஸ்யு பேப்பரில் தற்காலிகமாக அவரை ஒப்பந்தம் செய்து பார்சிலோனாவுக்கு விளையாட அழைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!