Tamil Reader

இந்த வாட்டி கப்ப தூக்குறோம்.. வாத்தியார் ரிட்டர்ன்ஸ்.. உலகக்கோப்பை டி20 இந்திய அணி அறிவிப்பு!

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் சூப்பர் 12ல் குரூப் 2 பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. இந்திய அணியோடு சேர்த்து பாகிஸ்தான், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும், பி பிரிவில் முதலிடம் பெறும் அணியும், ஏ பிரிவில் 2-ம் இடம் பெறும் அணியும் இடம் பெறும். துபாயில் வரும் அக்டோபர் 24-ம் தேதி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்த நிலையில் உலகக்கோப்பை டி20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்திய அணி : விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹர், ரவிசந்திரன் அஸ்வின், அக்ஷர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி

மாற்று வீரர்கள் : ஷ்ரேயாஸ் ஐயர், சர்துல் தாகூர், தீபக் சஹார்

Full list of India's 15-member squad for T20 World Cup | Cricket - Hindustan Times

தமிழக வீரர்கள் அஸ்வின், வருண் சக்ரவர்த்தி அணியில் இடம்பெற்றுள்ளார், தங்கராசு நடராஜனுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதுமட்டுமின்றி டி20 உலகக் கோப்பை இந்திய அணியின் ஆலேசகராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Breaking: MS Dhoni Turns Mentor For Team India -

பயிறச்சியாளர் ரவி சாஸ்திரியின் பணிக்காலம் இன்னும் 6 வாரங்களில் முடிய இருக்கும் நிலையில் தோனியின் வருகையும், ஆலோசனையும் அணிக்கு நிச்சயம் பலன் அளிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் கூல் தோனியின் தலைமையில் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ள நிலையில் அவரது வருகை வீரர்களின் மத்தியிலும் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது

 

இதையும் படிங்க.!