Tamil Reader

கடைசி பந்தில் வெற்றியை தட்டித்தூக்கிய சி.எஸ்.கே. – பரிதாப நிலையில் பல்தான்ஸ்!

ஐபிஎல் 2வது பாதி ஆட்டம் அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் களம் கண்டன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்தில் கொல்கத்தா தடுமாறினாலும் மிடில் ஆர்டர்களின் மிரட்டலான பேட்டிங்கால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. கெய்க்வாட், டு பிளெசிஸ், மொயின் அலி ஆகியோர் கணிசமான ரன்களை எடுத்து வெளியேறினர். பின்னர் வந்த அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, தோனி ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து நடையை கட்டினர். இதையடுத்து வந்த ஜடேஜா எட்டே பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரிகளை விளாசி 22 ரன்கள் குவித்து வெற்றியை தட்டிப்பறித்தார்.

Recent Match Report - KKR vs Super Kings 49th Match 2020/21 | ESPNcricinfo.com

கடைசி பந்தில் 1 ரன் தேவை என்ற நிலையில் தீபக் சஹர் அட்டகாசமாக விளையாடி சிங்கில் எடுக்க சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ஆட்டத்தின் போக்கையே மாற்றிய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

CSK vs KKR highlights, IPL 2021: Chennai Super Kings beat KKR by 2 wickets to claim top spot on points table | Hindustan Times

இதேபோல துபாயில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கோலி நிதானமாக விளையாடி 51 ரன்கள் விளாச மேக்ஸ்வெல் தனது பங்கிற்கு 37 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து மிரட்டினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய மும்பை அணியில் ரோஹித் சர்மா மட்டும் 43 ரன்கள் விளாசினார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பியதால் மும்பை அணி 18வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்த் 111 ரன்களில் சுருண்டது.

IPL 2021 Live Cricket Score, News, Stats, Schedules, Results, Highlights, Photos, Videos – NDTV Sports

பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறியது. இதனிடையே துபாயில் இன்று நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாட உள்ளது

இதையும் படிங்க.!