Tamil Reader

IPL 2021 அட்டவணை வெளியீடு: எந்தெந்த மைதானங்கள்? எந்தெந்த தேதிகளில்? முழு பட்டியல்..!

IPL_trophy_BCCI1_

ஒருவழியாக இந்த ஆண்டிற்கான IPL போட்டிகளின் அட்டவணையும் வெளிவந்துவிட்டது. கொரோனா காரணமாக சென்ற வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் IPL போட்டிகள் நடத்தப்பட்டன. IPL வரலாற்றிலேயே முதன்முறையாக சென்னை அணி, ப்ளே ஆஃபிற்குள் நுழையாமல் ஊருக்குத் திரும்பியது. கடந்தாண்டு விழுந்த அடிக்கு CSK பதிலடி கொடுக்கும் என மஞ்சள் ஆர்மியும், இந்தவாட்டியும் கப் எங்களுக்குத் தான் என பால்டான்ஸ் குரூப்பும் சமூக வலைத்தளங்களில் சண்டை செய்துவருகின்றனர். அதில் எண்ணையை ஊற்றியிருக்கிறது BCCI.

இந்த வருடத்திற்கான IPL முதல் போட்டி சென்னையில் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் மும்பையும், பெங்களூரு அணியும் மோதுகின்றன. ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது போட்டியில் சென்னையும் டெல்லியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியானது மும்பையில் நடைபெற இருக்கிறது.

உள்ளூர் அணிகள் அதே மைதானத்தில் விளையாடாதவாறு அட்டவணையை தயார் செய்திருக்கிறது BCCI. அதாவது சென்னையில் போட்டிகள் நடைபெற்றாலும் CSK விளையாடும் அனைத்து போட்டிகளும் மும்பை, பெங்களூரு, கொல்கத்தாவில் மட்டுமே நடைபெற இருக்கின்றன. மற்ற அணிகளுக்கும் இதே நிலைமைதான்.

அதேபோல, ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

போட்டி அட்டவணை

IPL2021_Schedule1
Image Credit: BCCI
IPL2021_Schedule2_
Image Credit: BCCI

இதையும் படிங்க.!