Tamil Reader

IPL 2020 அட்டவணை அறிவிப்பு.. அனல் பறக்க காத்திருக்கும் முதல் போட்டி.! யார் யார் மோதுகிறார்கள் தெரியுமா.?

ipl-2020

கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த IPL 2020 தொடரின் அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு IPL டி20 தொடர் இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.

இதனை அடுத்து இந்த தொடரில் பங்கேற்கும் 8 அணிகளுமே அமீரக மண்ணில் வந்து குவிந்துள்ளன. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு புதிய அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இந்த வருட IPL தொடரின் முதல் போட்டியானது வரும்19-ம் தேதி சனிக்கிழமை, அபுதாபியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அதே போல IPL 2020 தொடரின் 24 போட்டிகள் துபாயிலும், 20 போட்டிகள் அபுதாபியிலும், 12 போட்டிகள் ஷார்ஜாவிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளே-ஆஃப் மற்றும் இறுதி போட்டிக்கான இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நடப்பாண்டு IPL தொடரின் முதல் போட்டியே ஜாம்பவான்களாக திகழும் இரு அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!