Tamil Reader

இந்தியா – இங்கிலாந்து இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு – வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜனுக்கு வாய்ப்பு..!

INDIAN tEAM

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்தியா வென்ற நிலையில் தற்போது நடைபெற்றுவரும் T20 தொடரையும் சமன் செய்திருக்கிறது இந்திய அணி. இரு அணிகள் மோதும் இறுதி T20 போட்டி வரும் 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இரு அணிகளும் 2-2 என்ற நிலையில் இருப்பதால் கடைசிப் போட்டி இரண்டு அணிகளுக்குமே வாழ்வா? சாவா? போட்டியாகத்தான் இருக்கும். இந்நிலையில் அடுத்து நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது BCCI.

இந்திய அணி

  • விராட் கோலி
  • ரோஹித் ஷர்மா
  • ஷிகர் தவான்
  • சுப்மன் கில்
  • ஸ்ரேயாஸ் அய்யர்
  • சூர்யகுமார் யாதவ்
  • ஹர்திக் பாண்டியா
  • ரிஷப் பண்ட்
  • கேஎல் ராகுல்
  • யுஸ்வேந்திர சஹால்
  • குல்தீப் யாதவ்
  • க்ருனால் பாண்டியா
  • வாஷிங்டன் சுந்தர்
  • தங்கராசு நடராஜன்
  • புவனேஸ்வர் குமார்
  • முகமது சிராஜ்
  • ப்ரஷீத் கிருஷ்ணா
  • ஷர்துல் தாக்கூர்

இரண்டு தமிழர்களுக்கு வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் தங்கராசு நடராஜன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனையொட்டி பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு நாள் போட்டிகள் நடைபெறும் நேரம் இடம்:

போட்டி எண் தேதி நடைபெறும் இடம்
1. மார்ச் 23, செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோஷியேஷன் மைதானம், புனே
2. மார்ச் 26, வெள்ளிக்கிழமை மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோஷியேஷன் மைதானம், புனே
3. மார்ச் 28, ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோஷியேஷன் மைதானம், புனே

 

இதையும் படிங்க.!