Tamil Reader

IPL ல் இனி 10 அணிகள் ; ஒலிம்பிக்கில் இணையும் கிரிக்கெட் போட்டிகள் – வெளிவந்த BCCI அறிவிப்பு…!

ipl-2020

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் BCCI ன் இயக்குனர்கள் குழு கலந்துகொண்டது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றன.

IPL ல் 10 அணிகள்

வரும் 2022 ஆம் ஆண்டில் இருந்து IPL தொடரில் 10 அணிகள் பங்கேற்கும் என நேற்று நடைபெற்ற ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 8 அணிகள் களத்தில் இருப்பதால் அடுத்து இணைய இருக்கும் இரண்டு அணிகள் எவை எவை என்பதைத் தெரிந்துகொள்ள மக்கள் அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

அதேவேளையில் இந்தியாவின் முன்னணிப் பணக்காரர்களான அதானி மற்றும் கோயங்கா இந்த முறை IPL அணிகளை வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். ரைசிங் புனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணியை கோயங்கா வைத்திருந்தது நினைவிருக்கலாம்.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் T20 கிரிக்கெட் போட்டிகளை நடத்து குறித்த சர்வேதேச கிரிக்கெட் கமிட்டியின் (ICC) திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டுப் பொதுகூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் 2028 ஒலிம்பிக்ஸ் போட்டியில் கிரிக்கெட்டை இணைப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கமிட்டி மற்றும் சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியிடம் சில விளக்கங்களைக் கோரியுள்ளதாக BCCI அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அடுத்தவருடம் (2021) ஜப்பானின் தலைநகரான டோக்கியோவிலும், 2024 ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசிலும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!