இந்த வருடத்திற்கான IPL போட்டித் தொடரிலிருந்து CSK வின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் விலகியிருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக நடப்பு IPL தொடரில் இருந்து விலகுவதாக ஹர்பஜன் சிங் தெரிவித்திருக்கிறார்.
தொடரும் சிக்கல்
ஏற்கனவே CSK அணியின் துணைக் கேப்டனும் அதிரடி பெட்ஸ்மேனுமான சுரேஷ் ரெய்னா தனது தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்திருந்தார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அவரது உறவினர்களை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதன் காரணமாக அவர் இந்தியா திரும்பியதாக பின்னர் தகவல் வெளியானது.
இந்நிலையில் CSK அணியின் மூத்த வீரரான ஹர்பஜன்சிங் தொடரிலிருந்து விலகியிருப்பது CSK ரசிகர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
மிட்சல் சான்ட்னர், இம்ரான் தாகிர் என இரு ஸ்பின்னர்கள் அணியில் இருந்தாலும் அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாடலாம் என்பதால் ஹர்பஜன் சிங் இடத்தை பூர்த்தி செய்யப்போவது யார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.