Tamil Reader

மீண்டும் மேன்செஸ்டர் யுனைடட் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

CR7க்கு அடையாளம் கொடுத்த இங்கிலாந்தின் புகழ்பெற்ற மேன்செஸ்டர் யுனைடட் அணிக்கு ரொனால்டோ மீண்டும் விளையாட இருப்பது உறுதியாகியுள்ளது. போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் 36 வயதான கிறிஸ்டியானா ரொனால்டோ இத்தாலியின் யுவெண்டஸ் கிளப்புக்காக 2018-ம் ஆண்டில் இருந்து விளையாடி வந்தார்.

Cristiano Ronaldo Scores Insane Header & Twitter Is Freaking Out

இந்த நிலையில் யுவண்டஸ் கிளப்பை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய பல்வேறு முன்னணி க்ளப்கள் போட்டிப் போட்ட நிலையில், தனது செல்லப் பிள்ளையை மீண்டும் அணியில் எடுத்து அழகு பார்த்திருக்கிறது மேன்செஸ்டர் யுனைடட் அணி. அந்த அணி நிர்வாகம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர். விரைவில் மருத்துவ பரிசோதனை, ஒப்பந்தம் முடிந்ததும் சிவப்பு சீருடையில் இங்கிலாந்து மைதானங்களில் வலம் வர காத்திருக்கிறார் ரொனால்டோ. 2003-09ம் ஆண்டு வரை அந்த அணிக்கு விளையாடிய ரொனால்டோ 292 போட்டிகளில் விளையாடி 118 கோல்களை அடித்துள்ளார். பல்வேறு கோப்பைகளையும் வென்று கொடுத்து அணியை பலமாக்கியதில் ரொனால்டோ முக்கிய வீரராகவே திகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க.!