Tamil Reader

“ஆக்சிஜன் கிடைப்பதை யாரவது தடுத்தால் தூக்குதண்டனை விதிக்கப்படும்” : டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி..!

delhi-hc

மொத்த இந்தியாவும் ஆக்சிஜன் தட்டுப்பாடால் தவித்துவருகிறது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கையிருப்பு இல்லாததால் கொரோனா நோயாளிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவருகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவை மூடுவதாக அறிவித்துவிட்டது.

உத்திரப் பிரதேசத்தில் நிலமை கைமீறிச் சென்றுவிட்டது. மக்கள் காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை தூக்கிக்கொண்டு வரிசையில் நிற்கிறார்கள். ஒருபுறம் பல தன்னார்வலர்கள் தங்களது சொந்தக் காசைப் போட்டு ஆக்சிஜன் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து வருகின்றனர். இன்னொருபுறம் ஆக்சிஜனை கருப்புச் சந்தையில் விற்கும் மகா கேவலமான மனிதர்களும் இருக்கிறார்கள்.

இதனையறிந்த டெல்லி உயர்நீதிமன்றம், ஆக்சிஜன் கிடைப்பதை யாராவது தடுத்தால் அவருக்கு தூக்குத்தண்டனை விதிப்போம் என பகிரங்கமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசை கடுமையாக சாடியிருந்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

“பிச்சை எடுங்கள், திருடுங்கள், கடன் வாங்குங்கள், பணம் கொடுத்து வாங்குங்கள் ஆனால் ஆக்சிஜன் கிடைக்காமல் கஷ்டப்படும் மக்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்” என மத்திய அரசை கடுமையாகத் தாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!