இந்தியாவில் தற்போது நிலவி வரும் கொரோனா என்னும் COVID-19 பரவல் கட்டுக்குள் வந்த பின்பே, உள்நாட்டு, சர்வதேச விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமென மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சரக்கு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் மருந்து பொருட்கள் கொண்டு வரும் விமானங்கள், சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
வரும் 25ம் தேதி வரை அனைத்து உள்நாட்டு, சர்வதேச விமானப்போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
These Restrictions will be lifted once we are fully confident that the spread of the virus has been controlled & it poses no danger to fellow Indians. I thank everyone for their cooperation & help in these testing times.
Together we shall overcome & emerge stronger.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) April 8, 2020
இந்நிலையில் மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது டிவிட்டர் பதிவில், ‘கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எந்த ஒரு இந்தியருக்கும் ஆபத்து இல்லையென நம்பிக்கை ஏற்படும் போது இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
மேலும், சோதனையான நேரத்தில் ஒத்துழைப்பு நல்கும் ஒவ்வொருவருக்கும் என் நன்றிகள். நாம் ஒன்றிணைந்து இதனை கடப்போம். வலிமையாக வெளிப்படுவோம்’ என பதிவிட்டுள்ளார்.