Tamil Reader

இந்தியாவில் வந்துவிட்டது e-Rupi பணப்பரிவர்த்தனை – What is e-Rupi?

கொரோனா பரவலுக்குப் பிறகு இணையவழி பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. Google Pay, Paytm, Bhim உள்ளிட்ட செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது எளிதாகிவிட்டது. நகைக்கடைகள் முதல் சாதாரண டீக்கடைகள் வரை எளிய முறையில் பணத்தை செலுத்துவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பணப் பரிவர்த்தனையை மேலும் எளிமையாக்கும் விதமாக தற்போது e-Rupi எனும் புதிய வசதியை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் முன் கூட்டியே இணையவழியில் பணத்தை செலுத்தி கூப்பன்களை பெற்றுக்கொள்ள முடியும்.

PM Narendra Modi launches e-RUPI digital payment solution: 10 Key points

கூப்பன் தொடர்பான விவரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். பின்னர் பணம் செலுத்த வேண்டிய இடத்தில் கூப்பன் தொடர்பான விவரங்களை அளித்தால் அதில் இருந்து பணத்தை பிடித்தம் செய்து கொள்வர். கல்வி, மருத்துவச் செலவுகளுக்கு யாருக்காவது உதவ நினைத்தால் அவர்களுக்கு பணமாக கொடுப்பதற்கு பதில் உரிய இடத்தில் e-Rupi மூலம் நிதி செலுத்தி பின்னர் அதற்கு கிடைக்கும் கூப்பனை மட்டும் உதவி கேட்டவர்களுக்கு அளிக்கலாம். இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பின் பேசிய இந்திய பிரதமர் மோடி, நாடு சுதந்திரமடைந்ததன் 75வது ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, இந்த திட்டத்தை அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

E-Rupi To Usher In Person-Specific, Purpose-Specific Digital Payments

e-Rupi வசதியை எப்படி பயன்படுத்துவது?

பயனாளர்கள் முன்கூட்டியே பணத்தை செலுத்திவிட்டால் அவர்களது மொபைலுக்கு கூப்பன்கள் அனுப்பப்படும். அதற்கு முன்பாக பயனாளர்களின் மொபைல் எண், அடையாளம் போன்றவற்றை அரசு சரிபார்க்கும். இதனை பயன்படுத்த மொபைல் பேங்கிங், Google Pay, PayTM போன்ற பணப் பரிவர்த்தனை செயலி தேவையில்லை என்பதால் சாதாரண மொபைல் போன் வைத்திருப்பவர்கள் கூட இந்த சேவையை எளிதாக பயன்படுத்த முடியும். கூப்பன் விவரங்களை பணம் செலுத்த வேண்டிய இடத்தில் காண்பிடித்தால் செலுத்த வேண்டிய கடடணத்திற்கேற்ப பணம் பிடித்துக் கொள்ளப்படும்.

இதையும் படிங்க.!