Tamil Reader

மழைக்காக மரத்திற்கு அடியில் ஒதுங்கியவரின் உயிரைக்குடித்த மின்னல் – பதைபதைக்க வைக்கும் வீடியோ..!

India lightning strike

ஹரியானா: குருகிராமின் 82 வது செக்டாரில் அமைந்துள்ள சிக்னேச்சர் வில்லா வாடிகா சிட்டியில் கடந்த சனிக்கிழமை அன்று மின்னல் தாக்கியதில் ஒரு விவசாயி உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர்.

அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு மழை வலுக்கத் துவங்கியிருக்கிறது. இதனால் செய்வதறியாது நின்ற பணியாளர்களான உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷிவ்தத், லாலி, ராம்பிரசாத் மற்றும் குர்கோனைச் சேர்ந்த அணில் குமார் ஆகியோர் அருகில் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்றிருக்கிறார்கள்.

அந்த நேரம் பார்த்து மரத்தின் அடியில் நின்றவர்களை மின்னல் தாக்கியுள்ளது. இதனால் படுகாயமடைந்த பணியாளர்கள் அவசரமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

ஆனால், 38 வயதான ராம் பிரசாத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்த கோர காட்சிகள் தற்போது பலராலும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்துப் பேசிய வடிகா காவல்நிலைய பொறுப்பாளரான கிருஷ்ணன் குமார்,” மரத்தினடியில் நின்ற இவர்கள் மின்னல் தாக்கியதில் படுகாயம் அடைந்தனர். பின்னர் இவர்கள் அனைவரும் மேனேசரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராம் பிரசாத் மரணமடைந்தார்” என்றார்.

இதையும் படிங்க.!