Tamil Reader

உத்திரப் பிரதேசம்: மணமகனுக்கு 2 ஆம் வாய்ப்பாடு தெரியாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..!

marriage

உத்திரப் பிரதேசத்தின் மஹோபா பகுதியில் 2 ஆம் வாய்ப்பாடு தெரியாத மணமகனைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்றுகூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்தியது அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

திருமணம் நடைபெற இருந்த நாளில் மணமகனை சந்தித்த மணப்பெண் 2 ஆம் வாய்பாட்டை ஒப்பிக்கும்படிக் கூறியிருக்கிறார். நன்றாக ஆரம்பித்த மாப்பிள்ளை பாதிக்குமேல் விட்டத்தைப் பார்க்கவே மணப்பெண் கடுப்பாகி கல்யாணத்தையே நிறுத்தியிருக்கிறார்.

அடிப்படையான 2 ஆம் வாய்ப்பாடே தெரியாத நபரை எப்படிக் கல்யாணம் செய்துகொள்ளமுடியும் என அந்தப் பெண் சத்தம் போட்டிருக்கிறார். இதனால் திருமணமும் கைவிடப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க.!