Tamil Reader

“கொரோனா இருக்கா..?அப்படினா எங்காவது போய் செத்துடுங்க” – அரசு கொரோனா உதவி மையத்திற்கு போன் செய்தவருக்கு நேர்ந்தகதி – வைரலாகும் அரசு அதிகாரியின் ஆடியோ..!

up

உத்திரப் பிரதேசத்தின் மகாநகர் பகுதியில் வசித்துவரும் வழக்கறிஞர் ஒருவர், தனக்கு கொரோனா இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து அரசு கொரோனா உதவி மையத்திற்கு போன் செய்திருக்கிறார். தனது சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள கால் செய்தவரை.. கொரோனா இருந்தால் எங்காவது போய் செத்துடுங்க” என விழிப்புணர்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இவர்கள் பேசிய செல்போன் ஆடியோவை ஆதாரமாக குறிப்பிட்டு, அம்மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் புகாரளித்திருக்கிறார் பாதிக்கப்பட்டவர். உத்திரப் பிரதேசத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் அரசு அதிகாரியே இவ்வாறு பேசியிருப்பது பல்வேறு தரப்பட்ட மக்களிடையே கோபத்தைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க.!