Tamil Reader

பள்ளி மாணவர்கள் வங்கிக்கணக்கில் 900 கோடி ரூபாய் – மொத்த கிராமும் ஷாக்!

பீகாரில் மாணவர்களுக்குத் தேவையான பேக், புத்தகங்கள், சீருடைகள் வாங்க சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கிக் கணக்கில் மாநில அரசு பணம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலத்திலுள்ள கத்திகார் மாவட்டத்தில் வசிக்கும் இரண்டு மாணவர்கள், தங்களது வங்கிக் கணக்குக்கு அரசு செலுத்திய பணம் வந்திருக்கிறதா என்பதைப் பார்க்க தங்களது பெற்றோருடன் அங்குள்ள பொது சேவை மையத்திற்கு சென்றனர். அவர்கள் வங்கிக் கணக்கைப் பார்த்தபோது இரண்டு பேருக்கும் மயக்கமே வந்துவிட்டது. ஆறாம் வகுப்பு படிக்கும் ஆசிஸ் என்ற மாணவனின் வங்கிக் கணக்கில் 6.2 கோடியும், குருசரன் என்ற மற்றொரு மாணவனின் வங்கிக் கணக்கில் 900 கோடி ரூபாயும் வரவு வைக்கப்பட்டிருந்தது.பீகார் கிராமின் வங்கி இந்தப் பணத்தை மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தியிருந்தது.

latest tamil news
Credit : ANI

உடனே இது குறித்த செய்தி கிராமம் முழுக்கப் பரவியதால் பலரும் ஷாக்காயினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் மனோஜ் குப்தா செய்தி கேள்விப்பட்டு காலையிலேயே வங்கியைத் திறந்து விசாரணையின் ஈடுபட்டார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தத் தவறு நடந்திருக்கிறது என்றும் தவறுதலாகப் பணம் சென்ற வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கவிடாமல் செய்துகொண்டிருக்கிறோம் என்றார். மாணவர்களின் வங்கிக் கணக்கில் பணம் இருப்பதுபோல் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் வங்கிக் கணக்கில் பணம் இல்லை. வங்கியிடமிருந்து இந்தத் தவறு குறித்து அறிக்கை கேட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்துள்ளார். இரண்டு நாள்களுக்கு முன்பு இதே வங்கிதான் பீகாரைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ.5.5 லட்சத்தைச் செலுத்தியது. அந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட நபர் எடுத்துச் செலவு செய்துவிட்டார். வங்கி அதிகாரிகள் உண்மை நிலவரத்தை எடுத்துச் சொல்லி பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டதற்கு, பிரதமர் மோடி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாக சொல்லியிருக்கிறார். அதில் முதல் தவணைதான் அனுப்பப்பட்டிருப்பதாக நம்பி செலவு செய்து விட்டதாக வாக்குவாதம் செய்தார். இதனால் அவரை போலீஸார் கைது செய்தது நாடு முழுவதும் பேசு பொருளான நிலையில் தற்போது மாணவர்களின் வங்கிக்கணக்கில் 900 கோடி வரவு வைக்கப்பட்டிருப்பது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது

இதையும் படிங்க.!