Tamil Reader

ஆக்சிஜன் பற்றாக்குறை என யாராவது சொன்னால் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் : உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் – “கன்னத்தில் அறைவேன்” நடிகர் சித்தார்த் ட்வீட்..!

YogiAdityanath

உத்திரப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக யாராவது தகவலைப் பரப்பினால் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.

கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக இந்தியாவை தாக்கிவரும் இந்நிலையில் உத்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 60 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அம்மாநிலத்தில் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இப்படியான சூழ்நிலையில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இவ்வாறு பேசியிருப்பது பல்வேறு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னத்தில் அறைவேன்

பிரபல தமிழ் நடிகரான சித்தார்த் நேற்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள தகவலைக் குறிப்பிட்டு,”தவறான கூற்றுக்களை முன்வைக்கும் எந்தவொரு ஒழுக்கமான, புனிதமான அல்லது தலைவரும் அறையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். சித்தார்த்தின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க.!