Tamil Reader

இந்திய பொருளாதாரம் சரியும்: இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு..!

Indian Economy

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 1.9 சதவீதமாக சரியும் என இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 21 நாள் ஊரடங்கு, மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் கடும் சரிவை சந்திக்கும் 1 சதவீதம் முதல் 1.9 சதவீதத்துக்குள்தான் வளர்ச்சி இருக்கும் என ஐஎம்எப் உட்பட பல்வேறு அமைப்புகள் தெரிவித்தன.

இந்நிலையில், இந்தியா ரேட்டிங்க்ஸ் நேற்று வெளியிட்ட கணிப்பில், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும். இது 29 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவாகும்.

ஊரடங்கு மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டால், வளர்ச்சி 41 ஆண்டில் இல்லாத சரிவாக மைனஸ் 2.1 என எதிர்மறையாக மாறிவிடும் எனவும் இந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.


மற்ற சில பதிவுகள்