Tamil Reader

பெற்றோர்களே உஷார்… செல்போன், கம்ப்யூட்டர்களால் குழந்தைகளுக்கு காத்திருக்கும் ஆபத்து!

கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தொடர்ந்து செல்போன், கம்ப்யூட்டர்களை பார்க்கும் குழந்தைகளுக்கு மாறுகண், ஒன்றரை கண் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கண் பிரச்சனை சம்மந்தமான ஆய்வில் தெரியவந்துள்ளது.

குழந்தைகளுக்கான கண் பிரச்சனை

மருத்துவமனையில் கொரோனாவுக்கு முன்பு கிட்டப்பார்வை, மார்கண் பாதிப்புடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 5 மடங்காக அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வருடாந்திர அளவில் கிட்டப்பார்வை பாதிப்பு இயல்புக்கு மாறாக 100% அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

Best Ophthalmology Clinic in Mumbai, India - Kokilaben Hospital

கண் பிரச்சனைகளுக்கு என்ன காரணம்?

வீட்டிற்கு வெளியே சூரியஒளி படுமாறு இல்லாததும் விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற நடவடிக்கை மிகவும் குறைந்ததாலும் மொபைல், கணினி, டிவி ஆகியவற்றின் திரைகளைப் பார்க்கும் நேரம் பன்மடங்கு அதிகரித்திருப்பதுமே இதற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல்களை அடிக்கடி இடைவேளையின்றி நீண்டநேரம், வைத்த கண் வாங்காமல் பார்ப்பது மிக ஆபத்தானது. இதனால் கண்ணுக்கு ஏற்படும் அழுத்தம், கண்ணை சுருக்கிப் பார்ப்பதற்கு வழிவகுக்கும். கிட்டப்பார்வை பாதிப்பு வளர்ச்சியடைவதை துரிதமாக்கும் விளைவை இது ஏற்படுத்துகிறது.

Children's Eye Care - Aravind Eye Care System

பாதிப்புகள் என்னென்ன?

தீவிர கிட்டப்பார்வை பாதிப்பால் கண்புரை உருவாகும் வாய்ப்புள்ளது. கண் அழுத்தநோய், கருவிழி விடுபடல், பார்வைத்திறனை பாதிப்பு, மாறுகண் பிரச்னை உள்ளிட்டவைகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கண் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

குழந்தைகளை காக்க என்ன வழி?
  • தொடர்ந்து டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவதில் இருந்து குழந்தைகளை விலக்கி வைக்க வேண்டும்.
  • ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கண்களை நன்றாக மூடி திறந்து சிறியளவில் பயிற்சி செய்ய வேண்டும்.
  • சூரிய ஒளியில் உடல் படுவது மட்டுமின்றி குழந்தைகளை சராசரியாக 1 அல்லது 2 மணி நேரம் வரை டிஜிட்டல் சாதனங்களின்றி விளையாட அனுமதிக்க வேண்டும்.
  • ஆரோக்கியமான சத்தான உணவுப்பழக்கம் மூலமாக கண் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்

இதையும் படிங்க.!