Tamil Reader

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்..!

வெலிங்க்டன் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழகம் வந்த இந்தியாவின் முப்படைகளின் தலைவர் பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

இதனால் ஹெலிகாப்டரில் பயணித்த 11 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டார். 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவருக்கு வெலிங்கடன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பெங்களூருவுக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட வருண் சிங்கிற்கு விமானப்படை மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சைகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனாலும், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் இன்று, ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளதாக, இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. கேப்டன் வருண் சிங் மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க.!