சமீபத்தில், அமீரகத்திலிருந்து கேரளாவிற்கு கிலோ கணக்கில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் வேளையில் தற்போது மீண்டும் 5 தங்க கடத்தல்காரர்கள் பிடிபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷார்ஜாவிலிருந்து கேரளா வந்த இரண்டு பயணிகள் 230 (124+106) கிராம் எடையுள்ள தங்க நகைகளை அணிந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களது சாக்ஸில் மறைத்து வைத்திருந்த 334 தங்கக் கரைசலையும் புலனாய்வுத்துறை கண்டுபிடித்திருக்கிறது. இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இதேபோல, துபாயிலிருந்து கேரளா திரும்பிய இருவர் 932 கிராம் தங்கத்தினை தங்களது பைகளில் மறைத்து எடுத்துவந்திருந்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், அவர்களிடம் இருந்து 4 ஐபோன்கள், 45 பெட்டி சிகரெட்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டிருப்பதாக கேரள மாநில சுங்கத்துறை ஆணையம் தெரிவித்திருக்கிறது.
இவை தவிர்த்து, விமான நிலைய புலனாய்வுத்துறை ஒரு பெண் பயணியிடம் இருந்து 77 கிராம் எடையுள்ள 4 தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்திருக்கிறது.