Tamil Reader

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து!

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் காலிறுதி வரை ஒரு செட்டையும் இழக்காமல் அதிரடி காட்டிய பி.வி. சிந்து அரையிறுதியில் சீன தைபேவைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனையான Tai Tzu-Ying-ஐ எதிர்கொண்டார்.

Tokyo 2020: PV Sindhu's bid for Olympic gold ends in semi-final defeat to Tai Tzu Ying, to play for bronze - Sports News

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 18-21, 12-21 என்ற புள்ளிக் கணக்கில் சிந்து தோல்வியை தழுவினார். இருப்பினும் வெண்கலம் வெல்வதற்கான வாய்ப்பு பி.வி. சிந்துவுக்கு பிராகசமாகவே இருந்தது. வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் சீன வீராங்கனை He Bingjiao-வை எதிர்த்து சிந்து பலப்பரிட்சை நடத்தினார். தொடக்கம் முதலே போட்டியில் ஆதிக்கம் செலுத்திய சிந்து முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் வென்றார். இரண்டாவது செட்டை கைப்பற்ற சீன வீராங்கனை ஆக்ரோஷமாக விளையாடிய நிலையிலும் தனது அதிரடி ஷாட்கள் மூலம் போட்டியை தன் வசப்படுத்தி 21-15 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் வென்று வெண்கலப் பதக்கத்தை பி.வி.சிந்து தட்டிச் சென்றார்.

Tokyo Olympics Bronze tougher medal than Rio Silver, says PV Sindhu after scripting history in badminton - Sports News

மீராபாய் சானுவுக்குப் பிறகு இந்தியாவுக்குப் பதக்கம் வென்று கொடுத்த சிந்துவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர். ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் தொடர்ந்து 2 முறை பதக்கங்களை வெல்லும் முதல் இந்திய பெண்மணி எனும் சாதனையையும் படைத்துள்ளார் பி.வி. சிந்து. வெண்கலப் பதக்கம் வென்றபோதிலும் தங்கத்தை கோட்டைவிட்டது ஏமாற்றம் அளிப்பதாக கூறிய சிந்து, அடுத்த ஒலிம்பிக்ஸில் நிச்சயம் தங்கம் வெல்வேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் மங்கையை சமூக வலைத்தளங்களில் மக்கள் கொண்டாடி வருகின்றனர்

இதையும் படிங்க.!