Tamil Reader

மீண்டும் வெடித்துச் சிதறிய OnePlus Nord 2 மொபைல் போன் – மொபைல வாங்குறதுக்கு பதிலா வெடிகுண்ட வாங்கிட்டேன் என புலம்பல்!

இந்தியாவில் தொடர்ந்து 2வது முறையாக OnePlus Nord 2 மொபைல் போன் வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரான கவுரவ் என்பவர் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி OnePlus Nord 2 மொபைல் போனை புத்தம் புதிதாக வாங்கியுள்ளார். இந்த நிலையில் அலுவலக பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நீதிமன்ற வளாகத்திலேயே OnePlus Nord 2 மொபைல் போன் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கவுரவ் தீயை அணைத்துள்ளார். நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. கடும் கோபத்திற்குள்ளான கவுரவ் மொபைல் போன் வெடித்துச் சிதறியதை ட்விட்டரில் பதிவிட்டு மொபைல் போனை வாங்குவதற்கு பதிலாக வெடிகுண்டை வாங்கிவிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக மொபைல் போன் தயாரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி OnePlus நிறுவனத்தின் மீது அவர் அளித்த புகாரின் பேரில் டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

தவறுக்கு வருந்துவதாக ட்விட்டரில் பதிலளித்துள்ள OnePlus நிர்வாகம் தங்களை தொடர்பு கொள்ளுமாறும் கவுரவிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 2வது முறையாக ஒரே மாடல் மொபைல்போன் வெடித்துச் சிதறிய சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது

இதையும் படிங்க.!