Tamil Reader

இந்தியாவின் மர்மத்தீவு – உள்ள போனா திரும்ப வரவே முடியாது!

ஆதிவாசி பழங்குடியின மக்கள் இன்னும் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா? கற்காலத்தில் மனிதர்கள் வாழ்ந்தபோது, கற்களை ஆயுதமாகவும், இலை, மரப்பட்டைகளையும் ஆடைகளாகவும் அணிந்தார்கள். அந்த வாழ்க்கை முறையை இன்னும் ஒரு குழ செய்து வருகிறது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். இந்தியாவின் அந்தமான் தீவுகளில் ஒன்றான செண்டினல் தீவில் வசிக்கும் பழங்குடியின் மக்கள் எதார்த்த உலகத்தின் தொடர்புகளில் இருந்து விலகி இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

Andaman Islands' isolated tribes' independence may be in danger

யார் இந்த செண்டினல் பழங்குடியினர்?

அந்தமான் தீவுகளில் அந்தமான் பழங்குடி மக்கள், கிரேட் அந்தமானிஸ், ஓங்காஸ், ஜார்வாக்கள், சென்டினல்கள் எனப் பலவகை பழங்குடி மக்கள் வசிக்கிறார்கள். அதில் சென்டினல்கள் பழங்குடி மக்கள் உலகின் பிற மனிதர்களின் தொடர்பின்றியும், நாகரீகத்தை அறியாமலும் வாழ்ந்து வருகிறார்கள். அந்தமானில் உள்ள நார்த் சென்டினல் தீவில் வசிக்கும் நெக்ரிட்டோ வகை பழங்குடி மக்களே நார்த் சென்டினல் மக்கள் என அழைக்கப்படுகின்றனர். அந்தமானில் உள்ள இந்திய மானுடவியல் துறையின் கணக்கின்படி ஏறக்குறைய இந்த சென்டினல் மக்களின் பூர்வீகம் குறைந்தபட்சம் 30 ஆயிரம் ஆண்டுகளாகும். இந்தத் தீவில் ஏறக்குறைய 2 ஆயிரம் ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. செண்டினல் தீவில் 400 பேர் வரை வாழ்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. சென்டினல் தீவில் இருக்கும் காட்டுப்பன்றி, தேன், பழங்கள், இலைகள், மீன், தேங்காய் உள்ளிட்ட உணவுப்பொருட்களை உண்டு இவர்கள் உயிர் வாழ்கின்றனர்.

செண்டினல் மக்கள் ஆபத்தானவர்களா?

செண்டினல் மக்கள் தங்கள் நிலப்பரப்பைச் சாராது யாரையும் தங்கள் தீவுக்குள் அனுமதிப்பதில்லை. இதுவரை செண்டினல் தீவுக்குச் சென்ற பலரும் அங்கு கொல்லப்பட்டுள்ளனர். தூரத்தில் படகுகள் சப்தம் கேட்டாலோ மக்கள் வருவதை அறிந்தாலோ அவர்கள் ஈட்டி, அம்பு, கற்களை கொண்டு தாக்குவதற்கு தயாராகி விடுவர். 1991ஆம் ஆண்டு பூர்வகுடிகளை சந்திக்க குழு ஒன்று பரிசுப் பொருள்களுடன் சென்றது. குழுவினர் வழங்கிய தேங்காய்களை மட்டும் சென்டினல் பூர்வகுடியினர் பெற்றுக்கொண்டனர். அந்தக் குழுவினரை பூர்வகுடிகள் எதுவும் செய்யவில்லை. ஆனால் அதன்பிறகு சென்டினல் தீவுக்குள் சென்ற யாரும் உயிருடன் திரும்பியதில்லை. பூர்வகுடிகள் நாகரிக வளர்ச்சி பெற்றவர்களை வேற்று மனிதர்களாகவே பார்க்கின்றனர். அவர்களின் வாழ்வியலை பற்றிய தகவல்கள் கூட முழுமையாக இல்லை.

The Remote Tribe We Still Haven't Been Able to Contact | by Liam  Hunter-Bailey | History of Yesterday

செண்டினல் தீவில் இரு மீனவர்கள் மரணம்

2006-ம் ஆண்டு அந்தமானைச் சேர்ந்த மீனவர்கள் சுந்தர் ராஜ், பண்டிட் திவாரி ஆகியோர் தங்கள் படகை சென்டினல் தீவில் நிறுத்தி சிறிதுநேரம் ஓய்வு எடுத்துள்ளனர். அப்போது திடீரென சென்டினல் பழங்குடி மக்கள் அந்த இரு மீனவர்கள் மீதும் கூர்மையான அம்புகளை எய்தி தாக்குதல் நடத்தியதில் இருவரும் கொல்லப்பட்டனர். அதன்பின் இந்திய கடற்படையினர் இரு மீனவர்களின் உடல்களையும் மீட்கச் சென்றபோது அவர்கள் மீதும் சென்டினல் பழங்குடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் இரு மீனவர்கள் உடலை மீட்க முயன்றபோது, ஹெலிகாப்டர் மீது அம்பு வீசி தாக்குதல் நடத்தினார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமே கடைசியாக அங்கு எடுக்கப்பட்ட படம் என கூறப்படுகிறது.

North Sentinel Island: They Attacked My Chopper: Officer's Encounter With  Reclusive Andaman Tribe

சாத்தான்களின் இருப்பிடம் செண்டினல் தீவு

2015ஆம் ஆண்டு முதல் 4 முறை அந்தமானுக்கு சுற்றுலா சென்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் கடந்த 2018ல் செண்டினல் தீவுக்குள் நுழைந்து கிறிஸ்தவம் போதிக்க முடிவு செய்கிறார். இதற்காக அங்குள்ள மீனவர்களுக்கு அதிக பணம் கொடுத்து விலை பேசுகிறார். சிறு படகில் வடக்கு சென்டினல் தீவுக்குள் நுழைந்த அவர், செண்டினல் மக்கள் ஐந்தரை அடி உயரம் கொண்டவர்களாக இருந்தார்கள் என குறிப்பிட்டுள்ளார். பழங்குடிகளின் முகத்தில் மஞ்சள் நிறத் திட்டுகள் இருந்தன எனக் கடிதத்தில் எழுதியுள்ளார். தான் பரிசாக கொண்டு சென்ற கால் பந்துகளையும், மீன்களையும் பழங்குடிகள் முன்பு தூக்கி வீசிய பின்பு, எனது பெயர் ஜான், நான் உங்களை நேசிக்கிறேன், இயேசு உங்களை நேசிக்கிறார் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். வேற்று மனிதரை கண்டதும் கோபம் கொண்ட பழங்குடிகள் ஜானை நோக்கி சிறு அம்புகளை எய்துள்ளனர். அதில் ஒரு சிறுவனும் இருந்ததாக கடிதத்தில் கூறுகிறார் ஜான். எய்யப்பட்டதில் ஒரு அம்பு ஜான் தனது நெஞ்சுக்கு அருகே வைத்திருந்த பைபிளில் பாய்ந்து அவர் உயிரைக் காப்பாற்றியது.

American killed by isolated tribe on North Sentinel Island in Andamans |  India | The Guardian

மரணத்தின் வாயில் வரை சென்று திரும்பிய ஜான், தன்னை கொல்ல முயன்றவர்களை மன்னித்துவிடுங்கள் என கடிதத்தில் அவரது தந்தைக்கு செய்தியும் சொல்லியுள்ளார். தாக்குதலைத் தொடர்ந்து உடனடியாக படகுக்கு திரும்பினார் ஜான். நீந்தி படகுக்குச் சென்ற தன்னை பழங்குடிகள் துரத்தி வந்ததாகவும் கடிதத்தில் ஜான் தெரிவித்துள்ளார். பழங்குடிகள் தனது படகை சேதப்படுத்த முயன்றதாகவும் அவர் கூறியிருக்கிறார்.சென்டினல் தீவு சாத்தானின் இருப்பிடம் என நிறைவு செய்துவிட்டு தான் எழுதிய கடிதத்தை மீனவர்களிடம் கொடுத்துவிட்டு, அடுத்தநாள் மீண்டும் சென்டினல் தீவுக்குள் சென்றார் ஜான். போனவர் திரும்பவில்லை. பழங்குடிகள் அம்பு எய்து ஜானை கொன்று விட்டதாக கூறப்படுகிறது. மண்ணில் புதைந்த நிலையில் ஜானின் உடலை மீனவர்கள் பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜானை சென்டினல் தீவுக்கு அழைத்துச் சென்றதற்காக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

செண்டினல் தீவுக்குள் நுழைய தடை

அந்தமான் நிகோபர் தீவுகளை கடந்த 1956-ம் ஆண்டு பழங்குடி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. அந்தமானைச் சுற்றியுள்ள தீவுகளுக்குள்,குறிப்பாகப் பழங்குடி மக்கள் வாழும் பகுதிக்குள் யாரும் செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

Sentinelese

செண்டினல் மக்களை புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ, உணவுப்பொருட்கள், உடைகள், உள்ளிட்டவை கொடுக்க முயற்சித்தாலோ அவ்வளவுதான். திரும்பி வருவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. அந்தளவுக்கு மர்மத்தீவாகவே இன்று வரை விளங்குகிறது செண்டினல் தீவு

இதையும் படிங்க.!