Tamil Reader

நற்செய்தி: பயன்பாட்டுக்கு வரும் புதியவகை கொரோனா தடுப்புமருந்து – தண்ணீரில் கலந்து குடிக்கலாம் – ஒப்புதல் அளித்த இந்திய அரசு..!

2dg

இந்தியா: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) அதன் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (INMAS) -ல் மேற்கொண்டுவந்த கொரோனா தடுப்பு மருந்து குறித்த ஆய்வுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. டாக்டர் ரெட்டி மருந்து நிறுவனத்துடன் இணைந்து நடைபெற்ற இந்த ஆய்வில் டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) என்னும் மருந்துப் பொருளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெரும் நபர்களுக்கு இந்த மருந்தானது அளிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், நோயாளியின் உடலில் வைரஸ் தாக்குதலை இந்த மருந்து கட்டுப்படுத்துவதுடன் அவரைக் குணப்படுத்துவது தெரியவந்திருக்கிறது. பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு DRDO இதனை அவசர பயன்பாட்டிற்கு உபயோகிக்கலாம் என தற்போது அறிவித்துள்ளது.

ஆகவே அடுத்தவாரம் முதல் இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பவுடர் வடிவிலான இந்த மருந்தினை நீரில் கலக்கி நோயாளிகளை குடிக்கச் செய்வதன் மூலமாக நல்ல பலன்களைப் பெறலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மூன்று கட்ட ஆய்வுகளிலும் நல்ல ரிசல்டைத் தந்த இம்மருந்தானது முதற்கட்டமாக 10,000 டோஸ்களாக வெளியிடப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட இருக்கின்றன. இந்த மருந்தை DRDO விஞ்ஞானி டாக்டர் அனந்த் நாராயண் பாட் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!