Tamil Reader

இந்தியாவில் மீண்டும் உருமாறிய கொரோனா வைரஸ் – இதுவரை 6 பேர் பாதிப்பு..!

Covid-Coronavirus

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் ருத்ரதாண்டவம் ஆடிவருகிறது. லட்சக்கணக்கில் உயிர்களை பலிகொண்ட உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் உருமாறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் தாக்குதலினால் இதுவரையில் இந்தியாவில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இரண்டாம் அலையின்போது டெல்டா கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்தது. இந்நிலையில் மீண்டும் உருமாறியுள்ள கொரோனா வைரஸ் டெல்டா பிளஸ் என்று பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உருமாறிய கொரோனா இந்தியாவை உலுப்பிக்கொன்டிருக்கும் வேளையில் மீண்டும் வைரஸ் உருமாறியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க.!