Tamil Reader

முகக்கவசம் இல்லையென்றால் விமானங்களில் பயணிக்க அனுமதிக்கக்கூடாது – விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அதிரடி அறிவிப்பு..!

flight

விமானப் பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டிருக்கிறது.

மீண்டும் வழங்கப்பட இருக்கும் உணவுகள்

கொரோனா காரணமாக உள்நாட்டு விமானங்களில் பயணிகளுக்கு மே 25 முதல் தற்போது வரையில் உணவுகளோ, பானங்களோ வழங்கப்படாமல் இருந்தது. சர்வதேச விமானங்களில் மட்டும் பயணிகளுக்கு பதப்படுத்தப்பட்ட உணவும், பானங்களும் வழங்கப்பட்டுவந்தன. இந்நிலையில், விமானப் போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறையின்படி, இந்தியாவிற்குள் பயணிக்கும் விமானப் பயணிகளுக்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள், தின்பண்டங்கள் மற்றும் பானங்கள் ஆகியவற்றை வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, வெளிநாடுகளுக்குப் பயணிக்கும் விமானப் பயணிகளுக்கு சூடான உணவுகள் மற்றும் அளவான பானங்கள் ஆகியவற்றையும் வழங்க விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

உணவுத் தட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தத் தக்கதாக இருக்கவேண்டும் எனவும் உணவு வழங்கும் ஊழியர்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் வகையிலான கையுறைகள் அணிந்திருப்பது கட்டாயம் எனவும் வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகக்கவசம் இல்லையெனில் பயணம் ரத்து

முகக்கவசம் அணியாத பயணிகளின் பெயர்கள் பயணிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என விமானப் போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!