Tamil Reader

“நான் வாழ்ந்து முடித்துவிட்டேன்; எனது படுக்கையை அவருக்குக் கொடுங்கள்” – மருத்துவமனையில் 40 வயது நபருக்கு படுக்கையை அளித்த 85 முதியவர் மரணம்..!

82302934

நாக்பூர் இந்திராகாந்தி அரசு மருத்துவமனை ஒரே பரபரப்பாக இருந்தது. யாராவது எனது கணவரின் உயிரைக் காப்பாற்றுங்கள் என ஒரு பெண் உச்சத் தொனியில் கண்ணீர் கலந்த சொற்களுடன் மருத்துவர்களிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார். 85 வயதான நாராயண் தபால்கர் இதைக் கண்டு மனம் வருந்தியிருக்கிறார். அவருக்கு வயது 85.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசுப் பணியில் இருந்த தபால்கள் தற்போது தனது குடும்பத்துடன் வந்தார். கொரோனா தோற்று காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போதுதான் மேற்கூறிய சம்பவம் நேர்ந்திருக்கிறது.

நேரடியாக மருத்துவரிடம் சென்ற நாராயண்,”என் வாழ்க்கை முடிந்துவிட்டது. இனி நான் வாழ்ந்து என்ன செய்யப்போகிறேன்? எனது படுக்கையை வெளியே கஷ்டப்படும் 40 வயது நபருக்குக் கொடுங்கள். அவருக்கு சிறுவயதில் குழந்தைகள் இருக்கிறார்கள்” எனச் சொல்லியிருக்கிறார். மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி, நாராயண் தனது வீட்டிற்கு கிளம்பிச் சென்றிருக்கிறார்.

வீட்டிற்குச் சென்ற இரண்டு நாட்களிலேயே அவரது உடல்நிலை மோசமானது. உணவு உட்கொள்ள முடியாமலும், நகம் முழுவதும் கருப்பு நிறமாகவும் மாறியதால் அவரது வீட்டினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அன்றைய தினமே நாராயண் மரணமடைந்திருக்கிறார்.

இன்னொருவர் பரிந்துரையின் பேரில் ஒருவருக்கு படுக்கையை ஒதுக்கமுடியாது என மருத்துவர்கள் விளக்கியிருக்கிறார்கள். அவசரத் தேவை, நோயாளிகளின் உடல்நிலை ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு மட்டுமே மருத்துவர்கள் படுக்கையை ஒதுக்குவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் யாருக்காக நாராயண் தனது படுக்கையை விட்டுக்கொடுத்தாரோ அவருக்கு அந்தப் படுக்கை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முன்பாக காத்திருந்தவருக்கு அந்தப் படுக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!